மேற்காசியப் போருக்கு முன்னிருந்த விநியோகத்தைப் போல இனி வணிக காஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எல்பிஜி விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திவந்த தாக்குதலால், ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிகப்படியான தட்டுப்பாடுகளைத் தடுக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.
வீடுகளுக்கு தடையின்றி சமையல் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்பதற்காக ஹோட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு, வணிக காஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்தது.
முதலில் தடைசெய்யப்பட்ட வணிக காஸ் சிலிண்டர் விநியோகம் படிப்படியாக 20%, 50% விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
சீரான எரிவாயு வரவினால், நாடு முழுதும் விதித்த வணிக காஸ் சிலிண்டர் தொடர்பான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.