பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ் நாரிமன் காலமானார்!

பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ் நாரிமன் காலமானார்!

பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ்.நாரிமன்(95) வயது மூப்பு, உடல் பாதிப்பு காரணமாக இன்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார்.

1929 ஜனவரி 10 ஆம் தேதி மியான்மரில் பார்சி குடும்பத்தில் பிறந்த நாரிமன், 1950 இல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழிலை தொடங்கினார். 1955-இல் பாப்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்ட நாரிமன், இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவராக 19 ஆண்டுகள் இருந்துள்ளார்.

1972 மே முதல் 1975 ஜூன் வரை மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அரசுக்கு தனது சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

சர்வதேச வர்த்தக தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1976 இல் அரசியல் சட்ட 42 ஆம் திருத்தம் கொண்டு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரித்தார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வதாடி அவருக்கு ஜாமீன் பெற்றுத் தந்தார்.

சபரிமலை கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கும் வழக்கிலும் ஆஜராகி தனது வாதங்களை வைத்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

1999-2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

நீதி, அரசியல் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வந்த நாரிமனுக்கு இந்திய அரசு 1991-இல் பத்மபூஷன் மற்றும் 2007-இல் பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் தீர்ப்பு நாரிமனின் பல முக்கிய வழக்குகளில் ஒன்றாகும்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபில் உட்படப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com