15 ஆண்டுகள்தான் அரசு வேலை... குமாரசாமியின் அடேங்கப்பா ஐடியா!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி
Published on: 

அரசுப் பணியில் 15 ஆண்டுகள் முடிந்ததும் ஓய்வு கொடுத்துவிட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வேலை அளிக்கமுடியும் என வித்தியாசமான யோசனை ஒன்றைக் கூறியிருக்கிறார், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி.

தற்போது மத்திய அமைச்சர் பதவியிலிருக்கும் அவர், நேற்று பெங்களூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு தொடர்பான கூட்டத்தில் இவ்வாறு கூறினார். 

நகரில் வெள்ளியன்று நடைபெற்ற வேலைநாடுவோர் மத்தியிலான உரையாடலில் அவர் பங்கேற்றார்.

அப்போது பேசுகையில், “ அரசு வேலைக்கு எடுக்கப்படும் ஒருவர் 30-35 ஆண்டுகள் அதில் தொடர்கிறார். அதன்மூலம் அவருடைய குடும்பத்துக்கு பலன் கிடைக்கிறது. நல்லது. ஆனால், அரசு வேலை வயதைத் தாண்டியவர்களின் குடும்பங்களுக்கு என்ன கிடைக்கிறது? இதற்காகத்தான் நான் ஒரு யோசனை வைத்துள்ளேன். அரசு வேலை பெற்றவர் அதிகபட்சம் அந்த வேலையில் இருக்கலாம். ஓய்வுக்குப் பிறகு அவர் தனியார் வேலைக்குச் செல்லலாம். 8 - 10 ஆயிரம் ரூபாய்வரை நிரந்தரமான ஓய்வூதியம் அவருக்குக் கொடுக்கப்படும். இப்படிச் செய்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.” என்று குமாரசாமி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com