மோகன் பகவத்
மோகன் பகவத்

மணிப்பூர் விவகாரம்: மோகன் பகவத் அறிவுரை!

தேர்தல் தொடர்பான பேச்சுக்களை விட்டுவிட்டு, நாடு எதிர்கொள்ளும் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நேற்று முன்தினம் பதவியேற்றார்.

இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற சங்க நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன், “கடந்த ஓராண்டாகவே மணிப்பூர் மாநிலம் அமைதிக்காகக் காத்திருக்கிறது. அந்த மாநிலத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக அமைதியாக இருந்த மாநிலத்தில், திடீரென துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான பேச்சுக்களை விட்டு விட்டு, நாடு எதிர்கொள்ளும் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிக்கு இடையே ஒருமித்த கருத்து அவசியம்.”என்று மோகன் பகவத் கூறினார்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் மெய்தி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com