யுவ புரஸ்கார் அல்ல, வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது !

vagai chandrasekhar won akademi purashkar award
சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருது பெறுகிறார் வாகை சந்திரசேகர்
Published on

நாடக மேடைகளிலும், வெள்ளித்திரையிலும் நடித்து, கலைத்துறையில் பங்காற்றி வரும் வாகை சந்திரசேகருக்கு கலைத்துறையின் உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கப் பரிசும், தாமிரப் பட்டயமும், அங்கவஸ்திரமும் வழங்கப்படும்.

இசை, நாடகம், நடனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாகப் பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 108 கலைஞர்களுக்கு குடியரசுத்தலைவர் இவ்விருதை வழங்க உள்ளார்.

1980இல் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நடிப்புத் திறனைப் பாராட்டி, கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

'தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின்' தலைவராகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவராகவும் வாகை சந்திரசேகர் 2021-ம் ஆண்டு முதல் இவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

முன்னதாக, இவருக்கு சாகித்ய அகடமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் வெளியாகின.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com