உயிரிழந்த ரீனா தன் பிள்ளைகளுடன்
உயிரிழந்த ரீனா தன் பிள்ளைகளுடன்

மெட்ரோ ரயில் கதவில் புடவை சிக்கி இளம்பெண் பலி!

டெல்லி மெட்ரோ ரயில் கதவில் புடவை சிக்கி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 35 வயதான ரீனா என்ற பெண், கடந்த வியாழக்கிழமை மெட்ரோ ரயிலில் ஏற முற்பட்டபோது, அதன் கதவுகள் மூடப்பட்டதால், அவரது ஆடைகள் ரயிலில் சிக்கி, சிறிது தூரம் நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டுக் கடும் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

ரீனாவின் உடலை வாங்க மறுத்த அவரின் உறவினர்கள், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ரயில் கதவுகள் திறந்திருந்தால் இவ்விபத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேற்கு டெல்லியிலுள்ள நங்லோயில் இருந்து மோகன் நகருக்குச் செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், நேற்று இறந்துவிட்டார். அவரின் கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தன் மகள் மற்றும் மகனுடன் அவர் வாழ்ந்து வந்ததாகவும், ரீனாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com