சிப் வடிவமைக்கும் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடக்கம்!

Semicon 2.0
செமிகான் 2.0 திட்டம்
Published on

செமிகான் 2.0 திட்டத்தின்கீழ், சிப் வடிவமைக்கும் 200 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இந்தியாவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு செமிகான் 1.0 திட்டத்தின்கீழ், ரூ. 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி மதிப்பில் 12 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், செமிகான் 2.0 திட்டத்தின்கீழ், செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து, நேற்று டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செமிகான் இந்தியா மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அம்மாநாட்டில் பேசிய மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

"செமிகண்டக்டர் தொழிலுக்காக செமிகான் 1.0 திட்டத்தின்கீழ் இந்தியா அமைத்த அடித்தளத்தை வலுப்படுத்த 6 தூண்கள் அவசியம். அவை:

1) வடிவமைப்பு

2) எந்திரங்கள், மூலப்பொருட்கள்

3) உற்பத்தி ஆலைகள்

4) நவீன பேக்கேஜிங்

5) ஆராய்ச்சி, மேம்பாடு

6) திறன்

செமிகான் 1.0 திட்டத்தில், 105 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிப் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு ரூ. 800 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளன.

இந்த செமிகான் 2.0 திட்டத்தில், செமிகண்டக்டர் தேவைக்காக சிப் வடிவமைக்கும் 200 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நாடு முழுவதும் தொடங்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.

செமிகண்டக்டர் தொழிலை இந்தியாவில் வலுப்படுத்த அடுத்த 10 ஆண்டுகளில் 85 ஆயிரம் வடிவமைப்பு என்ஜினீயர்களுக்கு பயிற்சி அளிக்கவும், கூடுதலாக 1 லட்சம் திறன்வாய்ந்த தொழில்நுட்ப ஊழியர்களை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது." என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com