பிரதமர் திறந்துவைத்த சிவாஜி சிலை நொறுங்கியது!

Sivaji statue
சத்ரபதி சிவாஜி சிலை
Published on: 

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்த சத்திரபதி சிவாஜியின் சிலை இன்று விழுந்து நொறுங்கியது.

அங்குள்ள இராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்டு கடந்த டிசம்பர் நான்காம் தேதி அன்று கடற்படை தினத்தில் பிரதமர் மோடி இந்தச் சிலையை திறந்து வைத்திருந்தார்.

35 அடி உயரம் கொண்ட இந்த சத்ரபதி சிவாஜி சிலை இன்று மதியம் ஒரு மணி அளவில் அதன் பீடத்திலிருந்து திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர் மழையாலும் பலத்த காற்றாலும் நிகழ்ந்தது என இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தரம் இல்லாமல் சிலையை நிறுவியதே அது விழுந்ததற்கு காரணம் என்றும் தவறிழைத்த அரசுத் தரப்பினர் மீதும் கட்டுமான ஒப்பந்தகாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு, உத்தவ் பால் தாக்கரே சிவசேனை ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com