கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்!

எஸ்.எம்.கிருஷ்ணா
எஸ்.எம்.கிருஷ்ணா
Published on

உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்த கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) (சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா) பெங்களூருவில் இன்று காலமானார். அதிகாலை சுமார் 3 மணி அளவில், அவரது உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரை கர்நாடகா முதலமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. இதனைத்தொடர்ந்து 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மராட்டிய மாநிலத்தின் ஆளுநராகவும், 2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா.

முன்னதாக கடந்த 1989 முதல் 1993 வரை கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், 1971 முதல் 2014ஆம் ஆண்டு வரை பல முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் எஸ்.எம். கிருஷ்ணா.

கடந்த ஆண்டு, அவரது அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com