சோனியா காந்தி
சோனியா காந்தி

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார் சோனியா!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உட்பட 14 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். மாநிலங்களவையின் தலைவர் ஜெகதீப் தங்கார் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து உறுப்பினராகி உள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவரான அஜய் மக்கான் கர்நாடகத்திலிருந்தும், பா.ஜ.க.வின் மூத்த தலைவரான ஆர்.பி.என். சிங் உத்தரப்பிரதேசத்திலிருந்தும், பா.ஜ.க. உறுப்பினர் சமீக் பட்டாச்சார்யா மேற்கு வங்காளத்திலிருந்தும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான கோலா பாபு ராவ், மேத ரகுநாத் ரெட்டி, எரும் வெங்கட சுப்பாரெட்டி ஆகியோர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து பதவியேற்றுக் கொண்டனர். 

சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளார்.

தற்போது, நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உட்பட 12 பேர் நேற்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com