என் கேர்ள் பிரண்டுடன்.. மனம் திறந்த ராகுல் காந்தி... சோனியா புத்தக விழாவில் சுவாரஸ்யம்!

Sonia Gandhi's belonging book release event
சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தக வெளியீட்டு விழா
Published on: 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் நேற்று நடைபெற்றது.

சோனியா காந்தியின் 544 பக்கங்கள் கொண்ட சுயசரிதைப் புத்தகம், 'பிலாங்கிங் : எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி, 'ஹாப்பர் காலின்ஸ் இந்தியா' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் அதிகாரபூர்வ வெளியீட்டு விழா நேற்று தில்லியின் ஐடிசி மவுரியா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர். விஜய் முதல் வரிசையில் ராகுல் அருகே அமர வைக்கப்பட்டிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ,சமாஜ்வாதி காட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி உட்பட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து சோனியா காந்தியின் சுயசரிதை நூலை வெளியிட்டனர்.

இந்த விழாவில் சோனியா காந்தி பேசியதாவது:

"நான் யாரிடமும் எளிதில் பழகமாட்டேன். அதிகமாகத் தனிமையை விரும்புவேன். எனது வாழ்க்கை குறித்த சுயசரிதையை எழுத எனக்கு விருப்பம் கிடையாது. ராகுல், பிரியங்கா, எனது தோழி மஞ்சுலிகா துபே ஆகியோரின் விருப்பத்துக்காகத்தான் சுயசரிதையை எழுதினேன்.

நான் இந்த மண்ணைச் சேர்ந்தவள் இல்லை என்பதால் எனது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் என்னை மிகவும் மோசமாக விமர்சித்தனர். ஆனால், 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றி எல்லாவற்றையும் மாற்றியது." என்று சோனியா காந்தி குறிப்பிட்டார்.

இந்த விழாவில், இறுதியாக உரையாற்றிய ராகுல் காந்தி, "சோனியா காந்தி ஆரம்பத்தில் மிகவும் வெளிப்படையாக இருந்தார். ஆனால், எங்கள் குடும்பத்தினரான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்ட பின்னர் படிப்படியாக அவருடைய வெளிப்படையான சுபாவம் மறைந்தது." என்று கூறினார்.

மேலும், அவருடைய தாய் சோனியா காந்தியும், தந்தையும் சந்தித்த கேம்ப்ரிட்ஜில் உள்ள வேர்சிட்டி உணவகத்திற்கு தன் தோழியைக் கூட்டிச் சென்றதாகவும் கூறினார். அங்கிருந்த வெயிட்டர் தன் தாயையும் தந்தையும் நினைவு கூர்ந்ததாகவும் சொன்னார். ' லவ் பண்ணனும் என்றால் வேர்சிட்டி உணவகத்துப் போங்க. ஆனால் அங்கே நான் என் கேர்ள் பிரண்டோடு போனபோது ஆர்டர் பண்ணிய சிக்கன் சேஸியர் மட்டும் ஆர்டர் பண்ணிடாதீங்க. சுவையா இல்ல' என்று ஜோக் அடித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram