தபால் தலையை ஜே.பி.நட்டா வெளியிட இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் பெற்றுக் கொள்கிறார்
தபால் தலையை ஜே.பி.நட்டா வெளியிட இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் பெற்றுக் கொள்கிறார்

இலங்கை மலையகத் தமிழர் 200 - சிறப்பு தபால் தலை வெளியீடு!

தமிழ்நாட்டிலிருந்து மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையை பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா வெளியிட்டுள்ளார்.

தமிழர்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாகக் கூட்டிச்செல்லப்பட்டதை நினைவுகூரும் பல நிகழ்வுகள் கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்றன. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் உட்பட பலரும் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து, மலையகத் தமிழரின் இந்த 200ஆண்டுகள் வரலாற்றைக் குறிக்கும் வகையில் மத்திய அரசு நேற்று தபால் தலையை வெளியிட்டது.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசிய தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தபால் தலையை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொண்டார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரும் பங்கேற்றனர்.

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் நரேந்திர மோடி இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com