உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? - ஸ்டேட் வங்கியைக் கண்டித்த உச்சநீதிமன்றம்!

தேர்தல் பத்திர விவகாரத்தில் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்று ஸ்டேட் வங்கியை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. 

முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் 12ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் தரவேண்டும் என்றும் அதை ஆணையம் இன்றைக்குள் (மார்ச் 15) தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை அளித்ததில், பத்திர எண்களை ஒப்படைக்கவில்லை. 

இதனால், எந்தெந்தக் கட்சிக்கு யார் யார் நிதி அளித்தார்கள் எனும் விவரம் தெரியவில்லை. 

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு விசாரணையில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பத்திர எண்களை ஏன் தாக்கல்செய்யவில்லை என ஸ்டேட் வங்கியைக் கண்டித்தது. உடனடியாக பத்திர எண்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவும், நாளைமறுநாள் திங்களுக்குள் ஆணையம் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com