உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்குத் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டதற்கு உடனடித் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இது தொடர்பாக, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் ஆகியோர் தொடுத்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்த பழைய தேர்வு முறையை நீக்கி, அரசு கொண்டுவந்த 2023ஆம் ஆண்டு தேர்தல் ஆணையர் நியமனச் சட்டம் அரசமைப்புச்சட்டத்துக்கு எதிரானது என்கிற வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் அதன் தீர்ப்பு வரும்வரை புதிய சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட இருவரின் நியமனங்களையும் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது. 

இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வரும் 21ஆம் தேதிக்கு அடுத்த விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com