கார்கேவுடன் தமிழக காங்கிரஸ்எம்.பி.க்கள்
கார்கேவுடன் தமிழக காங்கிரஸ்எம்.பி.க்கள்

கார்கேவிடம் வாழ்த்து பெற்ற தமிழக காங்கிரஸ் எம்.பி.கள்!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி.க்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர்களாகியுள்ளனர்.

மேலும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாக்கூர், ஜோதி மணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம் கோபிநாத், விஷ்ணு பிரசாத், சுதா ஆகியோர் தில்லி சென்றனர். அவர்களுடன் விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டும் வாழ்த்து பெற்றார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com