இந்தியா
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் எனும் நடவடிக்கை கடுமையான எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையிலும் உள்ளது.
பெரும் பரபரப்புக்கு இடையே நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் இராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி, பட்டியலில் தன்னுடைய பெயரையும் நீக்கிவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
பட்டியலில் பெயரே இல்லாமல் நான் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என தேர்தல் ஆணையம் கூறவேண்டும் என்று அவர் கூறினார்.
இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்றும் வாக்காளர்களின் உரிமையை வழிப்பறி செய்வது என்றும் தேஜஸ்வி கூறினார்.