தெலங்கானா தேர்தல் முடிவுகள்
தெலங்கானா தேர்தல் முடிவுகள்

தெலங்கானா: மும்முனை போட்டியில் யார் கை ஓங்குகிறது?

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்திஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலைமுதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாகத் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தெலுங்கானா வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 40 இடங்களிலும், பிஆர்எஸ் 24 இடங்களிலும் பாஜக 4 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

தென் மாநிலமான தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

3.26 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்), காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

சந்திரசேகர ராவ் போட்டியிட்டுள்ள கஜ்வெல், காமரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் அவர் முன்னிலையில் உள்ளார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 62 இடங்களையும் பாரதிய ராஷ்டிரிய சமிதி 44 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com