கடந்த 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை முடக்கும் பணி, நாளை முதல் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தகுதியான குடும்பங்கள், இந்தத் திட்டத்தின் மூலம் தொடர்ந்து பயன் அடைவதை உறுதி செய்ய ரேஷன் கார்டுகள், பயனாளிகளின் விவரங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 20.4 ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் 1.58 கோடி ரேஷன் கார்டு பயனாளிகளின் சலுகைகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்காலிகமாக முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முடக்கப்படும் ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக மட்டுமே முடக்கப்படும் என்றும், அவர்களின் பெயர்கள் உடனடியாக தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு முடக்கப்பட்ட பயனாளிகள், 3 மாத காலத்திற்குள் இ - கே.ஒய்.சி. நடைமுறையை முடித்தால், அவர்களின் ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்படுத்தப்படும்.