தமிழிசையைக் கண்டிக்கும் அமித் ஷா
தமிழிசையைக் கண்டிக்கும் அமித் ஷா

அமித் ஷா விவகாரம்- பேச மறுத்த தமிழிசை!

ஆந்திரப்பிரதேச அமைச்சரவைப் பதவியேற்பு விழா இன்று முற்பகல் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மேடையில் இருந்த மைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை வணக்கம் வைத்தார். அப்போது, தமிழிசையிடம் கைநீட்டி அமித்ஷா ஏதோ சொல்ல, பதிலுக்கு தமிழிசையும் கையைக்காட்டி விளக்கம் சொல்ல முற்பட்டார்.

அதை ஏற்காத அமித்ஷா விரல்களை நீட்டி அவரிடம் கண்டிப்பாக ஏதோ கூறினார்.

இந்தக் காட்சி நேரலையாக ஊடகங்களில் ஒளிபரப்பானது.

கேரள காங்கிரஸ் கமிட்டி இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திரப்பிரதேச நிகழ்ச்சி முடிந்து பிற்பகல் விமானம் மூலம் சென்னைக்கு வந்தார், தமிழிசை. அவரிடம் செய்தியாளர்கள் மேடை விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, பதிலளிக்க மறுத்துவிட்டு அவர் தன் காரில் ஏறி அமர்ந்தார்.

அனைத்தும் நல்லபடியாக இருக்கிறதா என ஒருவர் கேட்க, கையை தம்ஸ் அப் போல உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார், தமிழிசை.

logo
Andhimazhai
www.andhimazhai.com