அருணாச்சலப்பிரதேசம்
அருணாச்சலப்பிரதேசம்

அருணாசலப் பிரதேசத்தின் 30 பகுதிகளுக்கு பெயரைமாற்றிய சீன அரசு!

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 30 பகுதிகளுக்கு சீன அரசு மீண்டும் வேறு பெயர் சூட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் பகுதிகளை சட்டவிரோதமாக சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களைச் செய்துவருகிறது.

சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு ஏற்கெனவே இப்படி மறுபெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்டது.

2017இல் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021இல் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023இல் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் வெளியிட்டது.

தற்போது வெளியிட்டுள்ள நான்காவது பட்டியலில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது. இதில், 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஓர் ஏரி, ஒரு மலைப்பாதை ஆகியவை உள்ளன.

சீன மொழியான மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் மாற்றியுள்ளது சீன அரசு. இதை, அந்நாட்டு அரசு நாளிதழிலும் வெளியிட்டுள்ளது.

சீனத்தின் இந்த அடாவடியை வெளியுறவுத் துறை தொடர்ந்து கண்டித்து வருகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com