மோடி முகமூடியை அணிந்து கொள்ளையடித்த நபர்... அதிர்ந்துபோன போலீஸ்!

Thief wore PM Modi mask
மோடியின் முகமூடியை அணிந்து கொள்ளையடித்த நபர்
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்து வந்து, செல்போன் கடையில் கொள்ளையடித்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள செல்போன் கடைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், அக்கடையில் இருந்த 40 ஸ்மார்ட் போன்கள், 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, அந்த முகமூடி அணிந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முகத்தை மறைக்க பிரதமர் மோடியின் முகமூடியைப் பயன்படுத்திய அந்தத் திருடனை, ராஜஸ்தான் போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காகப் இந்த புதிய பாணியைக் கையாண்டுள்ள திருடனின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com