இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்! – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Published on

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என பிரதமர் மோடி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

பெரிய மாற்றங்களும் சீர்த்திருந்தங்களும் கொண்ட ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும் என பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டது. இதனால் ஷாம்பு முதல் தொலைக்காட்சி வரை விலை குறைந்தது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025' தொடக்க விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குறைக்கடத்திகள், மொபைல்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் மகத்தான வாய்ப்புகளை இந்தியா வழங்கி வருகிறது. தொழில்துறையினர், முதலீட்டார்கள், ஸ்டார்ட்அப் முன்னேற வேண்டும். இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்.

கடந்த பத்து ஆண்டுகளில் டிஜிட்டல் துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் 1 ஜிபி டேட்டாவின் விலை ஒரு கப் தேநீரைக் குறைவு.

உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு சந்தையை இந்தியா கொண்டுள்ளது. ஒரு காலத்தில் 2ஜி சேவைக்காக போராடினோம். ஆனால், இன்று 5ஜி சேவை கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடைந்திருக்கிறது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com