டிப்ஸ் தருவது பயணிகள் விருப்பம் - மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

Tips to get faster ride should be removed
டிப்ஸ் கொடுக்கும் அம்சம் நீக்க வேண்டும்
Published on

வாகன முன்பதிவு செயலிகளில், பயணம் தொடங்குவதற்கு முன்னரே டிப்ஸ் வழங்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வாகன சவாரி செயலிகளான யூபர், ஓலா, ரேப்பிடோ முதலியவற்றில் பயணம் தொடங்கும் முன்னரே டிப்ஸ் வழங்கினால், வாகனம் விரைவாகக் கிடைக்கும் என்ற விருப்பத் தேர்வு இடம் பெற்றுள்ளது.

இதை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், டிப்ஸ் என்பது பயணம் நிறைவடைந்த பிறகு, பயணிகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் வழங்கப்படுவது என்று விளக்கியுள்ளது.

'அட்வான்ஸ் டிப்ஸ்', 'ஆட்-ஆன்' போன்ற அம்சங்கள் தற்போது வாகன முன்பதிவு செயலிகளில் காணப்படுகின்றன. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணாக இருப்பதோடு, பயணிகள் கூடுதல் பணம் செலுத்தவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது.

இத்தகைய வழிமுறைகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று வாகன முன்பதிவு செயலிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வழங்கும் டிப்ஸ் தொகை முழுவதும் நேரடியாக ஓட்டுநர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com