'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற தமிழர்: முதல்வர் விஜய் பாராட்டு!

முதல்வர் விஜய் ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்திற்கு 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
முதல்வர் விஜய் ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்திற்கு 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
Published on

'கீர்த்தி சக்ரா' விருது பெற்ற தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரத்தை, முதல்வர் விஜய் பாராட்டி காசோலை அளித்துள்ளார்.

'கீர்த்தி சக்ரா' ராணுவத்திற்காக வழங்கப்படும் விருதுகளில் இரண்டாவது உயரிய விருதாக கருதப்படுகிறது. பெகல்காம் சுற்றுலா தலத்தில் தன் மீதான சூட்டுத் தாக்குதலையும் பொருட்படுத்தாமல், 5 தீவிரவாதிகளைக் கொன்றுள்ளார். இந்த வீரச் செயலைப் பாராட்டி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 'கீர்த்தி சக்ரா' விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

இவர் 2007ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். பின் 2024ஆம் ஆண்டு ‘ஆண்டி டெரரிஸ்ட் போர்ஸ்’ பிரிவில் சேர்ந்து தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தார். இவரின் திறமையைக் கண்டு ஜம்மு பகுதிக்கு மாற்றப்பட்டார்.

அப்போது, ஜம்மு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர். இந்த தாக்குதலின்போது மீனாட்சிசுந்தரம் தாக்கப்பட்டார். இருந்தபோதிலும், 5 தீவிரவாதிகளை அடுத்தடுத்து சுட்டுக் கொன்றார்.

இந்த வீரதீரச் செயலைப் பாராட்டி, 'கீர்த்தி சக்ரா' விருது இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உயரிய விருதைப் பெற்றுள்ள ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரத்தை அவரது குடும்பத்தினருடன் தலைமைச் செயலகத்தில் சந்தித்த முதல்வர் விஜய் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com