காவிரி... ஒருவழியாக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!

Supreme court - Cauvery
உச்ச நீதிமன்றம் - காவிரி
Published on

தமிழகத்திற்கு நீர் திறந்துவிடாததால், கர்நாடக அரசாங்கத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுகளின்படி, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரையுள்ள 15 நாள்களுக்கு, பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர் வரும் வகையில், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பில்லிகுண்டுலுவில் வரப்பெற்ற தண்ணீரின் அளவு 550 கனஅடி மட்டுமே ஆகும்.

இன்றைய நிலவரப்படி, கர்நாடகத்தின் மொத்த நீர் இருப்பு 77.537 டி.எம்.சி-ஆக இருக்கிறது. மேலும், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் பகுதிகளில், அதிக மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், விகிதாச்சார அடிப்படையில், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 26.954 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுவதில் கர்நாடகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

ஆனால், அதைச் செய்ய கர்நாடகா அரசு தவறியதால், உரிய அளவு தண்ணீரைத் உரிய காலத்தில் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com