நிதி ஆயோக்கின் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்!

NITI Aayog S&T Scoreboard TN ranks first
நிதி அயோக்கின் அறிவியல் - தொழில்நுட்ப மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்
Published on: 

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள முதலாவது 'இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுப் பட்டியலில்' தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிதாக உருவாகும் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்ட ஒரு புதிய தளத்தை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அசோக் குமார் லாகிரி அண்மையில் புதுதில்லியில் வெளியிட்டார். இதன் முதல் மதிப்பீட்டில் தமிழகம் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆராய்ச்சி - வளர்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்புச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி 44,611 ஆராய்ச்சி வெளியீடுகள், 16,048 காப்புரிமை விண்ணப்பங்களைப் பதிவுசெய்து தமிழ்நாடு, பிற மாநிலங்களைவிட மிகப்பெரிய இடைவெளியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த மதிப்பீடானது, உயர்கல்வி நிறுவனங்கள், அரசு ஆய்வகங்கள், தொழில்முறைத் துறைகளின் தரவுகளை ஒருங்கிணைத்து வழங்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2024 - 25ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கை:

1) தமிழ்நாடு: 44,611

2) உத்தரப்பிரதேசம்: 29,298

3) மகாராஷ்டிரம்: 28,947

4) கர்நாடகம்: 27,970

5) தில்லி: 24,417

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram