இந்தியா
சுங்க கட்டணம் வசூல் செய்யும் விதிகளை திருத்தி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறைகளில் நவம்பர் 15 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதனால், பாஸ்டேக் இல்லையென்றால் கூடுதல் சுங்க கட்டணம் செலுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் முறை அமலில் உள்ளது. இனிவரும் நாட்களில் பாஸ்டேக் அல்லாமல் பணமாக செலுத்தினால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
அதே போல் யூபிஐ முறையில் சுங்க கட்டணம் செலுத்தினால் 25% கூடுதலாக செலுத்த வேண்டும். டிஜிட்டல் கட்டணமுறைகளை ஊக்குவிப்பதற்கான இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.