மும்பை இந்தியா அணி கூட்டம்
மும்பை இந்தியா அணி கூட்டம்

இந்தியா கூட்டணி தேர்தல் வியூகக் குழுவில் 14 பேர்!

மும்பையில் நடைபெற்றுவரும் இந்தியா கூட்டணியில் 14 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் இதில் இடம்பெற்றுள்ளார். 

காங்கிரஸ் கட்சியை முன்னிலையாகக் கொண்ட இந்தியா கூட்டணியின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் இன்றும் மும்பையில் நடைபெற்றுவருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, இராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் மமதா பானர்ஜி, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 28 கட்சிகளைச் சேர்ந்த 63 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.   

இதில் கூட்டணியின் ஒருங்கிணைப்பு, தேர்தல் வியூகக் குழு ஆகியவை அமைக்க முடிவுசெய்து, அறிவிக்கப்பட்டது.

காங்கிரசின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், திமுகவின் டிஆர்பாலு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன், சிவசேனா சஞ்சய் ராவத், ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ், திரிணமூல் அபிசேக் பானர்ஜி, ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா, சமாஜ்வாதியின் ஜாவேத் அலி கான், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லல்லான் சிங், இந்திய கம்யூ. கட்சியின் டி.ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெக்பூபா முக்தி ஆகியோருடன் சிபிஐஎம் கட்சியின் பிரதிநிதி ஒருவரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com