பிரதமர் மோடி விழாவில் 13,500 பேர் டான்ஸ்!

Tribal Dance
கின்னஸ் சாதனை படைத்த 13,500 பேரின் நடனம்
Published on

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

ரூ. 5,640 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஒரு கிரீன்பீல்டு விமான நிலையம் ஆகும்.

ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் உருவாகியுள்ள இந்த விமான நிலையம், எதிர்காலத்தில் 4 கோடி பயணிகள் வரை சேவை வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த விமான நிலையம் வட ஆந்திரப் பகுதிகளின் சுற்றுலா, தொழில், தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆகியவற்றுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதன் மூலம் விசாகப்பட்டினம் கடற்படை விமான நிலையத்தின் நெரிசலும் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான நிலைய தொடக்க விழாவில், பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், 13,500 பழங்குடியினப் பெண்கள், மாணவிகள், ஆந்திராவின் புகழ்பெற்ற பழங்குடியின பாரம்பரிய 'திம்சா' நடனத்தை ஒரே நேரத்தில் ஆடி அவரை வரவேற்றனர்.

ஆந்திராவின் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com