டிஜிபி சகோதரர்கள்- விவேக் சஹாய், விகாஸ் சஹாய்
டிஜிபி சகோதரர்கள்- விவேக் சஹாய், விகாஸ் சஹாய்

அண்ணன் மேற்குவங்கத்தில் டிஜிபி; தம்பி குஜராத்தில் டிஜிபி!  ஆச்சர்யம் ஆனால்  உண்மை!

இந்திய காவல்துறை வரலாற்றில் ஓர் ஆச்சர்ய நிகழ்வு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் இரண்டு மாநிலங்களில் ஒரே நேரத்தில் காவல்துறை தலைவர்களாக(டிஜிபி) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குஜராத்தில் விகாஸ் சஹாய் என்பவர் காவல்துறை தலைவராகப் பணிபுரிகிறார். அவரது அண்ணன் விவேக் சஹாய் மேற்குவங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி. அங்கே காவல்துறையில் ஊர்காவல் படை தலைவராகப் பணிபுரிந்துவந்தார். வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, மேற்குவங்கத்தில் காவல்துறைத்தலைவரை தேர்தல் ஆணையம் மாற்றியபோது, விவேக் சஹாய் புதிய காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஒரேசமயத்தில் அண்ணன் தம்பிகள் டிஜிபிகளாக இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விவேக் சஹாய், விகாஸ் சஹாய்- டிஜிபி சகோதரர்கள்
விவேக் சஹாய், விகாஸ் சஹாய்- டிஜிபி சகோதரர்கள்

விவேக் சஹாய் 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. அவரது தம்பி விகாஸ் சஹாய் 1989 பேட்ச்.

இதுமட்டுமல்ல. இவர்களின் கடைக்குட்டி மூன்றாவது தம்பி ஒருவர் டெல்லியில் இந்திய வருவாய்த் துறை அதிகாரியாகவும் உள்ளார்.

எப்படிப் பட்ட பவர்ஃபுல் குடும்பம் பார்த்தீர்களா?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com