யூ.ஜி.சி
யூ.ஜி.சி

இட ஒதுக்கீடு: யூ.ஜி.சி. அறிவிப்புக்கு எதிர்ப்பு- மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்!

Published on

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யூ.ஜி.சி. அறிவிப்புக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நீக்கம் செய்வதற்கான (De- Reservation) வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை (Draft Guidelines) பல்கலைக்கழக மானியக் குழு இன்று வெளியிட்டது.

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் யூஜிசியின் இந்த முடிவுக்குக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் கடும் கண்டம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், உயர் கல்வி / மத்தி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமன இட ஒதுக்கீடு தொடர்பாக 2019 சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றவும், அந்த சட்டத்தின் அடிப்படையிலேயே காலி பணியிடங்களை நிறப்புவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த பதிவை யூ.ஜி.சி. எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அதன் தலைவர், உயர் கல்வி நிறுவங்னகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான அனைத்து காலி பணியிடங்களும் நிரப்புவது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com