வேலைவாய்ப்பின்மை வீதம் 5.1% ஆகக் குறைவு - மத்திய அரசு

Unemployment rate reduced
வேலையின்மை வீதம் குறைவு
Published on: 

இந்தியாவில் வேலையின்மை வீதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தின் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

தேசிய புள்ளியியல் - திட்ட அமலாக்க அமலாக்கத்தின்கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் ஜூலை-செப்டம்பர் 2026 காலாண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"நாடு முழுவதும் 15 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடந்த காலாண்டில் 54.6% ஆக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் 55.5% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இந்த விகிதம் 58.1% ஆக அதிகரித்துள்ளது.

Labour Force Participation Rate
தொழிலாளர் பங்கேற்பு விகிதம்

இதேபோல், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம் முந்தைய காலாண்டில் 51.7%-லிருந்து 52.7% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் 55.6% ஆக அதிகரித்துள்ளது.

Worker Population Ratio
ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம்

நாடு முழுவதும் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் முந்தைய காலாண்டில் 5.4% ஆக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் 5.1% ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.8%-லிருந்து 4.3% ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 6.8% ஆக உள்ளது. கிராமப்புற விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு 56.7% ஆக உயர்ந்துள்ளது.

நடப்பு காலாண்டில் 15 வயது, அதற்கு மேற்பட்டவர்களில் சராசரியாக 57.9 கோடி பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 40.5 கோடி பேர் ஆண்களும், 17.4 கோடி பேர் பெண்களும் ஆவர்." என்று புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தால் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram