இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்கால பொருட்களைத் திருப்பி கொடுத்தது அமெரிக்கா!

Prime Minister Narendra Modi and US President Joe Biden
இந்திய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் 4-ஆவது உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர், 297 பழங்கால பொருட்களை அந்நாட்டு அரசு இந்தியாவிடம் ஒப்படைத்து உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், "297 விலைமதிப்பற்ற பழங்கால பொருள்களை திருப்பிக் கொடுப்பதை உறுதிசெய்த அதிபர் ஜோ பைடன் மற்றும் அமெரிக்க அரசுக்கு நான் என்னென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பொருட்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 - கி.பி. 1900 இடையிலான காலகட்டத்தில் இந்தியவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com