மணப்பெண் (மாதிரிப்படம்)
மணப்பெண் (மாதிரிப்படம்)

மாப்பிள்ளைகளைத் தேடி அலையும் போலீஸ்! ஹெச்ஐவி பெண் கிளப்பிய பகீர்!

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் இரண்டு மாநில சுகாதாரத்துறைக்கு தலைவலியைக் கொடுத்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் யு.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த பெண் அவரின் தாய் உட்பட ஏழு பேரை உத்தரப் பிரதேச காவல் துறை கைது செய்து முசாபர் நகர் சிறையில் அடைத்தது.

இதற்குக் காரணம், அந்த பெண் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்த பணத்தையும் பொருட்களையும் திருடிச் சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயும் மற்றும் சிலரும் உடந்தையாக இருந்துள்ளார்.

சிறையில் உள்ள அந்த பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எ.ஐ.வி. இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவத் துறையினரும் காவல் துறையினரும் அந்த பெண் திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, அந்த பெண்ணுடன் தொடர்பிலிருந்த 3 மாப்பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தினரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உத்தராகண்ட் மாநில மாநில சுகாதாரத்துறை என்.ஜி.ஓக்களின் உதவியுடன் அந்த பெண்ணுடன் தொடர்பிலிருந்த மற்ற நபர்களைத் தேடி வருகிறது.

ஏமாந்தது மட்டுமல்லாமல் எயிட்ஸ் நோயையும் மணப்பரிசாகக் கொடுத்திட்டாளே எனப் புலம்பல் சத்தம் பலமாகக் கேட்கிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com