விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
Published on

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் அது சட்டமாகியுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக வளர்ந்த பாரதம் - ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி திட்ட மசோதா( விபி - ஜி ராம் ஜி) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசுகள் 40 சதவீதமும் நிதி ஒதுக்க வகை செய்யப்பட்டது. வேலைநாள்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற இரு அவைகளின் விவாதத்துக்கு பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் இம்மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.இதன் மூலம் இந்த மசோதா சட்டமாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com