மின்சாரம் இல்லாமல் நீர் இறைக்கும் இயந்திரம்! அறிவியலாளரின் அரிய கண்டுபிடிப்பு!

மின்சாரம் இல்லாமல் நீர் இறைக்கும் இயந்திரம்! அறிவியலாளரின் அரிய கண்டுபிடிப்பு!

மின்வசதி இல்லாத ஒரு கிராமத்தில் மின்சாரமே தேவை இன்றி இயங்கி நீரை வெளியேற்றும் மோட்டார்களை இயக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார் விஞ்ஞானி ஒருவர். பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த இவர் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இதைச் செய்து காட்டி இருக்கிறார்.

புனித் சிங், இந்திய அறிவியல் நிறுவனத்தில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். டர்பனைகள் மூலம் மின்சார தயாரிப்பு பற்றி ஜெர்மனியில் ஆய்வுப் படிப்பு முடித்தவர். சிறு தடுப்பணைகளில் இருந்து ஆற்றுக்குள் வழியில் நீரைப் பயன்படுத்தி டர்பைன்களைச் சுழலச் செய்து அதன் மூலம் மின் மோட்டார்களை இயக்கும் சக்தியை உருவாக்கி, தொடர்ச்சியாக நீர் இறைக்கும் வசதியை அவர் உருவாக்கி உள்ளார்.

அக்கிராமத்தில் கீழ் மட்டத்தில் இருந்து சுமார் 15 மீட்டர் உயரம் வரை நீரைக் கொண்டு செல்ல இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. மின்சாரமே தேவைப்படாமல் இயங்குவதுதான் இதன் சிறப்பு.

ஜெர்மனியில் இருந்து இரண்டு மின் உருவாக்கத் திறன் கொண்ட டர்பைன் குழாய்கள், அமெரிக்காவில் இருந்து ஒரு பம்ப் ஆகியவற்றுடன் சுமார் 50 லட்சம் முதலீடு செய்து மூன்றாண்டுகால உழைப்பில் இது உருவாகி இருப்பதாகத் தெரிவிக்கிறார் பேராசிரியர்.

இத்தொழில்நுட்பம் எளிமையாக்கப்பட்டு பரவலாக அறிமுகமானால் பல மின்வசதி அற்ற பகுதிகளுக்குப் பலன் அளிக்கும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com