டி.கே. சிவகுமார்
டி.கே. சிவகுமார்

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்! – டி.கே. சிவகுமார்

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உள்ளோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேகதாதுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

மேலும், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய பங்கீட்டு நீரை விடுவிக்க உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வறட்சி ஏற்பட்டுள்ள காலத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை வேண்டாம். போதுமான தண்ணீர் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உள்ளோம்.

மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் தந்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாகவே தண்ணீர் திறக்க முடியும். ஏனெனில் கடந்த ஆண்டு 400 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் சென்றது. அணை இருந்தால் தேக்கி வைத்திருக்கலாம்.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com