திருமணம் (மாதிரிப்படம்)
திருமணம் (மாதிரிப்படம்)

படிப்பை விட இந்தியர்கள் இதுக்குதான் அதிகம் செலவு பண்றாங்களாம்!

அமெரிக்கக்காரனையே நம்மூர்காரன் ஒரு விஷயத்தில் ஓவர்டேக் பண்ணிட்டான். இதை நினைச்சு பெருமைப்படுவதா… ஆதங்கப்படுவதா…?

விஷயம் இதுதான்...

பிரபல அமெரிக்க முதலீட்டு வங்கியியல் நிறுவனமான ஜெப்ரீஸ், சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையின்படி, இந்தியர்கள் கல்விக்கு செலவிடுவதை விட திருமணத்துக்கே கொட்டிகொட்டி செலவு செய்வதாக தெரியவந்துள்ளது. அதிலும், இரண்டு மடங்கு அதிகமாம்!

இந்தியர்கள் செய்யும் இந்த செலவு, அமெரிக்கர்கள் செய்யும் திருமண செலவைவிட அதிகம் என்று கூறுகிறது அந்த ரிப்போர்ட்.

கிடைத்த தகவலின் அடிப்படையிலும் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதின் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளது ஜெப்ரீஸ்.

இந்தியர்கள் திருமணத்துக்கென்று சராசரியாக ரூ. 12.5 லட்சம் வரை செலவு செய்வதாகவும், இது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு வரை ஆகும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது.

இந்தியர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தை விட மூன்று மடங்கு தொகையை திருமணத்தில் செலவு செய்வதாக ஜெப்ரீஸ் ஆய்வு கூறுகிறது.

மேலும், இந்திய திருமணங்களில் ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாகவும், திருமணத்தையொட்டி நடைபெறும் வரவேற்பு நிகழ்வு, திருமண மண்டபம், தங்கும் விடுதி, தடல்புடலான பந்தி, அலங்காரங்கள், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இவ்வளவு செலவு செய்யப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இதில், நகைகள், திருமண உடை, விமான கட்டணங்கள் போன்றவை சேர்க்கப்படவில்லை.

மொத்த திருமண செலவில், மணப்பெண் நகை, பாதி செலவும்; 10 சதவீதம் ஆடைக்கும்; 20 சதவீதம் சாப்பாட்டுக்கும்; 15 சதவீதம் மேக்கப் மற்றும் நிகழ்வுகளுக்கு செலவு செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

இந்தியத் திருமணங்களின் சந்தை மதிப்பு ரூ. 10.7 லட்சம் கோடி என்பதால்தான் என்னவோ, பிரதமர் மோடி ‘இந்தியாவில் திருமணங்கள்’ செய்யுங்கள் என ஊக்கப்படுத்தினார் போல!

logo
Andhimazhai
www.andhimazhai.com