(இடமிருந்து வலம்) பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபன்சூ சுக்லா
(இடமிருந்து வலம்) பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபன்சூ சுக்லா

விண்வெளி செல்லும் 4 வீரர்கள் யார்? - அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் இன்று செய்து, அவர்களை கௌரவித்தார்.

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது.

விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில், விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்களை அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விண்வெளிக்கு செல்லும் வீரர்களை அறிமுகம் செய்து கெளவிரத்தார்.

இதன்படி விமானப்படை குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபன்சூ சுக்லா ஆகியோரை நேரில் அறிமுகம் செய்து கௌரவித்தார். அவர்களுக்கு அடையாள பட்டையையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com