இப்படியொரு அம்மாவா…?- இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்!

இப்படியொரு அம்மாவா…?- இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்!

ஒடிசா மாநிலம், நிம்கானி கிராமத்தை சேர்ந்தவர்கள் குரு - லட்சுமி ஜூவாங் தம்பதியினர். பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களான இவர்களுக்கு இதுவரை மூன்று குழந்தை பிறந்துள்ளன. முத்த பிள்ளைக்கு ஏழு வயது ஆக, மற்ற இரண்டு குழந்தைகளையும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார், அவர்களின் தாயான லட்சுமி.

சாஹி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரான லட்சுமி (வயது- 35), கடந்த 2018ஆம் ஆண்டு, ஒன்றரை வயதான தன்னுடைய பெண் குழந்தையை, கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். இந்த குற்றத்திற்காக, 5 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைக்கு சென்றவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த மாதம் அவருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. பிறந்து 24 நாட்களே ஆன, அந்தக் குழந்தைக்கு குங்குமம் பூசி, வீட்டின் வாயிற்படியில் வைத்து, கோடாரியால் வெட்டிக் கொன்றுள்ளார், தனது கணவருக்கு தெரியாமல்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, அந்த பெண்ணின் மாமனார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல் துறையினர் அந்த பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்த லட்சுமிக்கு எதாவது மனநல பிரச்னை இருக்கிறதா என்று தெரியவில்லை. லட்சுமி குழந்தைகளை அவர் நரபலி கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். அதேபோல், பிரசவத்திற்குப் பிறகு, சில பெண்களுக்கு ஏற்படும் மனநலப் பிரச்சினை காரணமாக கூட லட்சுமி இந்த செயலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com