மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 7 முக்கிய அம்சங்கள்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நேற்று தாக்கல்செய்தார். இந்த மசோதா, அரசமைப்புச் சட்டத்தில் 128ஆவது திருத்தம் கோருவதற்கான மசோதா ஆகும்.

மூன்றில் ஒரு பங்கு

1. நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் ஆகும்.

உள் ஒதுக்கீடு

2. பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் உள் ஒதுக்கீடு அளிக்கப்படும்.

15 ஆண்டுகள்க்கு தொடரும்

3. இதன் மூலம்15 ஆண்டுகளுக்கு மகளிர்க்கு இடஒதுக்கீட்டை அளிக்க வழிவகை செய்கிறது.

மறுவரையறைக்குப் பிறகு மாறும்

4. ஒவ்வொரு முறை தொகுதி மறுவரையறை செய்யும் போதும், மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்படும்.

பாதி மாநிலங்களின் ஒப்புதல் அவசியம்

5. மகளிர் இடஒதுக்கீடு மசோதா, அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதா என்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய பிறகு, பாதிக்குப்பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

2024 தேர்தலில் இல்லை

6. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது. தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, அது முடிந்த பிறகே, மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.

இப்போது எவ்வளவு பேர்?

7. தற்போது பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் 14 சதவீதமும், மாநில சட்டப்பேரவைகளில் 8 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், அனைத்து அவைகளிலும் பெண்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக உயரும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com