ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு தீ வைப்பு
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு தீ வைப்பு

முன்னாள் முதல்வர் சிலைக்கு தீ வைப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல்துறை கண்காணிப்பாளர் முரளி கிருஷ்ணா தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அவர் தெரிவிப்பதாவது, ``அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பயன்படுத்தி அத்தேப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலையை எரித்துள்ளனர். அதுமட்டுமன்றி தெலுங்கு தேசம் கட்சியின் கொடிக்கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க விரிவான விசாரணை நடந்து வருகிறது. மேலும், குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். இவர் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஆவார்.

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com