திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக யூசுப் பதான்; 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக யூசுப் பதான்; 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 42 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். முன்னாள் கிரிக்கெட் யூசுப் பதான் பஹரம்புர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தேசிய மற்றும் மாநிலத்தில் உள்ள பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மத்தியில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பராடா மைதானத்தில் இன்று நடைபெற்ற மெகா பேரணியில் வேட்பாளர் பட்டியலை திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

அப்போது 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார்.

அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹரம்புர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் கிருஷ்ணாநகர் தொகுதி வேட்பாளராக மஹூவா மொய்த்ரா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலில் பல புதிய முகங்கள் உள்பட 16 சிட்டிங் எம்.பி.களுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com