எக்ஸ்போசேட் செயற்கைக்கோள்
எக்ஸ்போசேட் செயற்கைக்கோள்

எக்ஸ்போசேட்- அமெரிக்காவைத் தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனை!

எக்ஸ்போசேட் எனப்படும் எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோளை இந்தியா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவி நிலைநிறுத்தியுள்ளது. இதன்மூலம், உலகத்திலேயே இந்த சாதனையைச் செய்த இரண்டாவது நாடு எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, இன்று காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி-58 ராக்கட் மூலம் எக்ஸ்போசேட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள், எக்ஸ் கதிர்களை வெளியிடக்கூடிய விண்வெளிப் பொருட்களைப் பற்றி முக்கியமாக ஆராயும். அதாவது, கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள், மற்ற எக்ஸ் கதிர்களை உமிழக்கூடிய பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சியை இந்த செயற்கைக்கொள் மேற்கொள்ளும்.

கருந்துளைகளை ஆய்வுசெய்யக்கூடிய முயற்சியை அமெரிக்காவின் நாசாவுக்கு அடுத்து, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு-இஸ்ரோதான் இறங்கியுள்ளது.

இந்த செயற்கைக்கோளில் போலிக்ஸ், எக்ஸ்பெக்ட் ஆகிய இரண்டு பகுதிகள் உள்ளன. இவை இரண்டும் புவிவட்டப் பாதையின் தாழ்வு மட்டத்தில் இயங்கும்படி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com