இந்தியா
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்றுடன் காலியான வைகோ முதலிய ஆறு தமிழக உறுப்பினர்களின் இடத்துக்கு புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் தி.மு.க. அணியைச் சேர்ந்த நான்கு பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதையொட்டி நேற்றே தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவையில் இன்று காலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில், அவையின் துணைத்தலைவர் முன்னிலையில் கமல் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுக்கொண்டார்.
நேற்றுவரை உறுப்பினராக இருந்த மூத்த வழக்குரைஞர் வில்சன் இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
கவிஞர் சல்மா, கள்ளக்குறிச்சி சிவலிங்கம் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.