சட்டப்பேரவைத் தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தல்வடிவமைப்பு - எஸ்.கார்த்தி

4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளும் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுடன் நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தலும், 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது.

இதன்படி, சிக்கிம் மாநிலத்தில் அனைத்து 32 தொகுதிகளுக்கும், அருணாச்சலப்பிரதேசத்தில் அனைத்து 60 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளிலும் மே13 அன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

ஒதிசாவில் 28 தொகுதிகளுக்கு மே 13 அன்றும், 35 தொகுதிகளுக்கு மே 20 அன்றும், 42 தொகுதிகளுக்கு மே 25 அன்றும், மேலும் 42 தொகுதிகளுக்கு ஜூன்1 அன்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. 

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டின் விளவங்கோடு தொகுதியிலும் திரிபுராவின் இராம்நகர் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. பீகார், குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலங்கானா, கர்நாடகம், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலின்போதே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com