டெல்லி- நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!

டெல்லி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

டெல்லி மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. 

முன்னதாக, மைய பா.ஜ.க. அரசானது தங்களின் ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாகவும் பா.ஜ.க. தங்கள் கட்சி உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்து நேற்று திடீரென அவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக அவர் அறிவித்தார்.

வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 54 வாக்குகளும் எதிர்த்து ஒரு வாக்கும் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் சிறையில் உள்ளனர்; ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com