தில்லி போலீஸ் வழக்கு - உயர்நீதிமன்றத்தில் நேகா போரா முறையீடு!

நேகா போரா, அகில இந்திய மாணவர் கழகத் தலைவர்
நேகா போரா, அகில இந்திய மாணவர் கழகத் தலைவர்
Published on: 

அகில இந்திய மாணவர் கழகத் தலைவர் நேகா போராவுக்கு தில்லி போலீஸ் அனுப்பிய அறிவிக்கையை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

இன்று அக்டோபர் 19ஆம்தேதி நேகாவை போராட்டம் தொடர்பான வழக்குகள் தொடர்பாக வரச்சொல்லி தில்லி போலீஸ் அழைப்பாணை அனுப்பியது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க மாட்டேன் என நேகா 10,000 ரூபாய் பிணை மனுவில் கையெழுத்திட்டுத் தரவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதை ஏற்க நேகா தரப்பு மறுத்துவிட்டது. அவரின் சார்பில் வழக்குரைஞர்கள் மட்டும் போலீசில் ஆஜராவது என அறிவித்துள்ளனர். 

அத்துடன், தில்லி போலீசின் வழக்குப்பதிவு பொருத்தமானது அல்ல என்றும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் 19, 21ஆகியவற்றை மீறுவது என்றும் நேகாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய மாணவர் கழகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com