இந்தியா
கரூர் துயர சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் நடிக விஜய்யிடம் புதுதில்லியில் சிபிஐ குழுவினர் இன்று காலையில் விசாரணையைத் தொடங்கினர்.
முன்னதாக, இதற்காக சென்னையிலிருந்து இன்று காலையில் தனி விமானம் மூலம் அவர் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோருடன் புதுதில்லிக்குப் பயணமானார். முற்பகல் 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தை அவர் அடைந்தார்.
அங்கு அவரிடம் 11.15 மணியளவில் விசாரணை தொடங்கியது. உணவுக்காக மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை இடைவெளி விடப்பட்டது.
உணவுக்குப் பின்னர் விசாரணை மீண்டும் தொடங்கியது. பிற்பகல் 3.30 மணியளவில் விஜய்யிடம் விசாரணையை முதல் கட்டமாக முடித்துக்கொண்டனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின்போது, அவரிடம் எழுத்துபூர்வமாக பதிலை வாங்கியதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.