இந்தியா

பச்சிளம் குழந்தைகளின் உணவுவகைகளில் சுக்ரோஸ், பிரக்டோஸ் ஆகிய வகைச் சர்க்கரைப் பொருட்களைச் சேர்க்கத் தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்புத் தரநிலை அமைப்பு இதுகுறித்த கருத்துக்கேட்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
சிறு வயதினருக்கு ஏற்படும் உடல் பருமன் உட்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க இந்த முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ள உணவுத் தரநிலை அமைப்பு, கருத்து கூறுவதற்கு 60 நாள்கள்வரை அவகாசம் அளித்துள்ளது.
அந்தக் காலக் கெடுவுக்குள் பொதுமக்கள் இந்தத் தடை குறித்த தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கமுடியும்.